/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கர்நாடகாவில் ஒரே ஆண்டில் 971 விவசாயிகள் தற்கொலை
/
கர்நாடகாவில் ஒரே ஆண்டில் 971 விவசாயிகள் தற்கொலை
UPDATED : ஜூலை 05, 2025 01:33 PM
ADDED : ஜூலை 05, 2025 06:25 AM

பெங்களூரு: மத்திய, மாநில அரசுகளின் நலத் திட்டங்களுக்கு இடையிலும் விவசாயிகள் தற்கொலைகளை கட்டுப்படுத்த முடியவில்லை. கர்நாடகாவில் ஒரே ஆண்டில் 971 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
விவசாயிகளின் நலனுக்காக, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தியுள்ளன.
தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்த பின், விவசாயிகள் தற்கொலைகள் குறைந்ததாக காங்கிரசார் கூறுகின்றனர். ஆனால் ஒரே ஆண்டில் 971 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது.
விவசாய உபகரணங்கள், உரம், விதைகளின் விலை உயர்வு, கடன் தொல்லை, விளைச்சல் சேதமடைந்தது, விளைச்சலுக்கு நியாயமான விலை கிடைக்காதது போன்ற, பல்வேறு பிரச்னைகளால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
2024 ஏப்ரல் 1 முதல், 2025 மார்ச் இறுதி வரை, கர்நாடகாவில் 971 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.
விவசாயிகள் தற்கொலையில் ஹாவேரி முதலிடத்தில் உள்ளது.
விவசாயிகளை அரசுகள் அலட்சியப்படுத்துவதே, தற்கொலைக்கு முக்கிய காரணம். விளைச்சல்களுக்கு சரியான நீர்ப்பாசன வசதி செய்ய வேண்டும். விளைச்சல்களுக்கு நியாயமான விலை கிடைக்க செய்ய வேண்டும்.
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம், ஐந்து லட்சம் ரூபாய் வரை, வட்டியில்லா கடனுதவி வழங்க வேண்டும்.
விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய வேண்டும் என, விவசாய சங்கத்தலைவர்கள் வலியுறுத்துகின்றனர்.
நேற்று முன் தினம் மட்டும், இரண்டு விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். மாண்டியா மாவட்டம், மலவள்ளி தாலுகாவின், தேவிபுரா கிராமத்தை சேர்ந்த விவசாயி ஜவனம்மா, 75, கல்லாரேபுரா கிராமத்தின் விவசாயி மாதேகவுடா, 70.
இவர்கள் இருவரும் விளைச்சல் பயிரிட, பல இடங்களில் கடன் வாங்கியிருந்தனர். இதை திருப்பிச் செலுத்த முடியாமல், ஜவனம்மா விஷம் குடித்தும், மாதேகவுடா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.