/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சகோதரருடன் சேர்ந்து பணியாற்ற ரேவண்ணா உறுதி
/
சகோதரருடன் சேர்ந்து பணியாற்ற ரேவண்ணா உறுதி
ADDED : ஜூலை 04, 2025 11:22 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மைசூரு: மைசூரில் நேற்று முன்னாள் அமைச்சர் ரேவண்ணா அளித்த பேட்டி:
நாங்கள் பா.ஜ.,வுடன் ஒருங்கிணைந்து செல்கிறோம். கூட்டணி வைத்தே தேர்தலை சந்திப்போம். மாநில அரசின் தோல்வியை கண்டித்து போராட்டம் நடத்துவோம்.
மாநிலத்தில் ம.ஜ.த.,வை ஆட்சியில் அமர்த்துவதே, எங்களின் குறிக்கோள்.
இதற்காக நானும், மத்திய அமைச்சர் குமாரசாமியும், முன்னாள் பிரதமர் தேவகவுடாவும் சேர்ந்து பணியாற்றுவோம்.
காங்கிரசின் தனிப்பட்ட விஷயத்தை பற்றி, நான் பேசமாட்டேன். அது அவர்கள் கட்சி சம்பந்தப்பட்ட விஷயமாகும். அதற்கும் எங்கள் கட்சிக்கும் சம்பந்தம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.