வெள்ளி பொருட்கள் இறக்குமதி அரசு கட்டுப்பாடுகள் தளர்வு
வெள்ளி பொருட்கள் இறக்குமதி அரசு கட்டுப்பாடுகள் தளர்வு
UPDATED : ஜன 19, 2024 05:06 PM
ADDED : ஜன 16, 2024 11:59 PM
புதுடில்லி : மத்திய அரசு, சில வகை வெள்ளி பொருட்கள் இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது.
வெள்ளி பேஸ்ட், மின்னணுவியல், மின்சாரம் மற்றும் சோலார் தொழிற்சாலைகளுக்கான குழாய்கள் போன்ற சில வெள்ளி பொருட்களின் இறக்குமதிக்கு, அரசு கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக இந்த பொருட்களை இறக்குமதி செய்வதற்கு எந்த கட்டுப்பாடுகளும் இல்லை என்று வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
முன்னதாக, இந்த பொருட்களின் இறக்குமதி, தடை செய்யப்பட்ட வகையின் கீழ் வைக்கப்பட்டிருந்தது. இதன் படி, இறக்குமதியாளர்கள் இவற்றின் இறக்குமதிகளுக்கு, அரசிடம் உரிமம் பெறுவது கட்டாயமாக இருந்தது.தற்போதைய அறிவிப்புக்கு பிறகு, நிறுவனங்கள் இந்த பொருட்களை தங்களது தயாரிப்புகளுக்கான உள்ளீட்டு பொருளாக பயன்படுத்துவதற்காக மேற்கொள்ளும் இறக்குமதிகளுக்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
எனினும் வேறு பிற நோக்கங்களுக்காக இறக்குமதி செய்யப்பட வேண்டும் என்றால், ரிசர்வ் வங்கி மற்றும் வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் குறிப்பிடப்பட்டுள்ள ஏஜன்சிகள் வாயிலாக செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

