sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பங்கு வர்த்தகம்

/

பங்கு சந்தை நிலவரம்

/

பங்கு சந்தை நிலவரம்

பங்கு சந்தை நிலவரம்

பங்கு சந்தை நிலவரம்


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போர் பதற்றத்தால் சரிவு


இந்திய பங்குச் சந்தைகள், வாரத்தை சரிவுடன் நிறைவு செய்தன. ஈரானின் அணு ஆயுத வசதிகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் போர் பதற்றம் மேலும் அதிகரித்தது. இது முதலீட்டாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. நேற்றைய வர்த்தக நேரத்தின் இடையே சென்செக்ஸ் 1,330 புள்ளிகளும்; நிப்டி 410 புள்ளிகளும் சரிவு கண்டன.

கச்சா எண்ணெய்யை சார்ந்திருக்கும் எண்ணெய், விமானம் மற்றும் பெயின்ட் நிறுவன பங்குகள் கடும் சரிவு கண்டன. கடந்த இரண்டு நாள் சரிவால், முதலீட்டாளர்களுக்கு 8.35 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே, கடந்த 6ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு, கிட்டத்தட்ட 44,000 கோடி ரூபாய் அதிகரித்து, 59.22 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

உலக சந்தைகள்


வியாழனன்று, அமெரிக்க சந்தைகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. ஆசிய சந்தைகளை பொறுத்தவரை, ஜப்பானின் நிக்கி, ஹாங்காங்கின் ஹாங்சேங், தென்கொரியாவின் கோஸ்பி, சீனாவின் ஷாங்காய் எஸ்.எஸ்.இ., என அனைத்தும் நேற்று சரிவுடன் முடிவடைந்தன. ஐரோப்பிய சந்தைகள் சரிவுடன் வர்த்தகமாகின.

சரிவு கண்ட பங்குகள் - நிப்டி (%)


அதானி போர்ட்ஸ் 2.27

ஐ.டி.சி., 1.67

எஸ்.பி.ஐ., 1.57

ஹிண்டால்கோ 1.49

அதானி என்டர்பிரைசஸ் 1.43

சரிவுக்கு காரணங்கள்


இஸ்ரேல் - ஈரான் இடையே போர் பதற்றம்

கச்சா எண்ணெய் விலை உயர்வு

அன்னிய முதலீடு


அன்னிய முதலீட்டாளர்கள் 1,264 கோடி ரூபாய்க்கு பங்குகளை நேற்று விற்று இருந்தனர்.

கச்சா எண்ணெய்


உலகளவிலான கச்சா எண்ணெய் விலை, நேற்று 1 பேரலுக்கு 7.44 சதவீதம் அதிகரித்து, 74.52 அமெரிக்க டாலராக இருந்தது.

ரூபாய் மதிப்பு


அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 59 பைசா சரிந்து, 86.11 ரூபாயாக இருந்தது.




    • Dinamalar Events


    Dinamalar