/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
ஏ.ஆர்.எஸ்., இன்ப்ரா ஐ.பி.ஓ.,
/
ஏ.ஆர்.எஸ்., இன்ப்ரா ஐ.பி.ஓ.,
ADDED : ஜூன் 13, 2025 10:56 PM

புதிய பங்கு வெளியீடு வாயிலாக நிதி திரட்டவுள்ள ஏ.ஆர்.எஸ்., இன்பிரா சொல்யூஷன்ஸ் நிறுவனம், பங்கு ஒன்றின் விலையை 210 முதல் 222 ரூபாயாக நிர்ணயித்துள்ளது.
ஏ.ஆர்.எஸ்., இன்பிரா புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக 2.25 கோடி பங்குகளை வெளியிட்டு 499.60 கோடி ரூபாய் திரட்டவுள்ளது. சில்லரை முதலீட்டாளர்கள் வரும் 18ம் தேதி முதல் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
குறைந்தபட்சம் 67 பங்குகள் கோரி விண்ணப்பிக்கலாம். கடந்த 2021ல் துவங்கப்பட்ட இந்நிறுவனம், கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு நிறுவனங்களுக்கு பொருட்கள் வாங்குவதிலும், நிதி நிர்வாகத்திலும் உதவுகிறது. திரட்டப்படவுள்ள தொகையில் பெரும்பகுதி கடனைத் திருப்பிச் செலுத்தவும்; நிறுவனத்தின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யவும் பயன்படுத்தப்பட்ட உள்ளது.