பயங்கரவாதிக்கு வக்காலத்து வாங்குவதா ?: காங்., எம்.பி.க்கு பா.ஜ., கண்டனம்
பயங்கரவாதிக்கு வக்காலத்து வாங்குவதா ?: காங்., எம்.பி.க்கு பா.ஜ., கண்டனம்
ADDED : ஜூலை 25, 2024 09:22 PM

புதுடில்லி: காலிஸ்தான் ஆதரவு எம்.பி.யான அம்ரித்பால்சிங்கை விடுதலை செய்ய வேண்டும் என பார்லிமென்ட்டில் காங். எம்.பி., சரண்ஜித்சிங் சன்னி பேசியதற்கு பா.ஜ.,கண்டனம் தெரிவித்துள்ளது.
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று கூட்டத்தொடரில் பஞ்சாப் மாநிலம் ஜலாந்தர் தொகுதி காங்கிரஸ் எம்.பி., சரண்ஜித் லோக்சபாவில் பேசியது,
இங்கு மத்தியில் ஆளும் பா.ஜ., தினம், தினம் அவசர நிலை பிரகடனத்தைப்பற்றி பேசுகிறார்கள். ஆனால் இன்று நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலைதான் நடக்கிறது. பஞ்சாபில் காதூர் ஷாகிப் தொகுதி 20 லட்சம் மக்களால் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட அம்ரித்பால் சிங், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் உள்ளார். தொகுதி மக்களுக்கு சேவை செய்ய அவரை விடுதலை செய்ய வேண்டும் என்றார்.
காங். எம்.பி.யின் இந்த பேச்சிற்கு பா.ஜ. எம்.பி.க்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இது குறித்து அவர்கள் கூறியது, சிறையில் உள்ள அம்ரித்பால் சிங், காலிஸ்தான் ஆதரவாளார். ஒரு பயங்கரவாதிக்கு ஆதரவாக காங்., எம்.பி. பேசுவது, பஞ்சாபில் சட்டம், ஒழுங்கு சீர்கெட காரணமாகிவிடும் என்றார்.