சிறுமிக்கு பாலியல் தொல்லை மகளிர் தெரபிஸ்டுக்கு '20 ஆண்டு'
சிறுமிக்கு பாலியல் தொல்லை மகளிர் தெரபிஸ்டுக்கு '20 ஆண்டு'
ADDED : ஜூலை 27, 2024 10:58 PM
பெங்களூரு: கிளினிக்குக்கு வந்த சிறுமிக்கு, பாலியல் தொல்லை கொடுத்த, மகளிர் தெரபிஸ்ட்டுக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பெங்களூரு, பானஸ்வாடியின் ஹெச்.ஆர்.பி.ஆர்., லே - அவுட் முதல் ஸ்டேஜில் வசிப்பவர் சான்ட்ரா உர்சில், 26. மகளிர் ஸ்பீச் தெரபிஸ்டான இவர், 'ஹலோ ஒர்ல்டு ஸ்பீச் அண்டு ஹியரிங்' என்ற பெயரில், கிளினிக் நடத்துகிறார்.
சரியாக பேச்சு வராத 12 வயது சிறுமியை, சான்ட்ரா உர்சிலிடம், பெற்றோர் சிகிச்சைக்கு அழைத்து வந்தனர். 2022 மே மாதம் முதல் சிறுமிக்கு சிகிச்சை அளித்து வந்தார். வாரத்தில் மூன்று நாட்கள் தெரபிக்காக, மகளை அழைத்து வந்தனர். சிறுமியை அறைக்குள் அழைத்து சென்ற சான்ட்ரா உர்சில், பாலியல் தொல்லை கொடுத்தார்.
இது குறித்து, சிறுமி தன் பெற்றோரிடம் கூறினார். கோபமடைந்த பெற்றோர், கோவிந்தபுரா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
வழக்கு பதிவு செய்த போலீசார், தெரபிஸ்ட் சான்ட்ரா உர்சிலை கைது செய்தனர். விசாரணையை முடித்து, பெங்களூரின் ஒன்றாவது விரைவு நீதிமன்றத்தில், குற்றபத்திரிகை தாக்கல் செய்தனர்.
விசாரணையில் குற்றம் உறுதியானதால், இவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை, 60,000 ரூபாய் அபராதம் விதித்து, நேற்று முன்தினம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 1.50 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கும்படி உத்தரவிட்டது.