ADDED : ஜூலை 22, 2024 06:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மைசூரு: மைசூரு தசரா கண்காட்சி வாரிய வளாகத்தில் நேற்று வன மகோத்சவம் நிகழ்ச்சி நடந்தது.
இந்நிகழ்ச்சியை முன்னிட்டு, வாரிய வளாகத்தில், 500 மரக்கன்றுகள் நடப்பட்டன. முதல் மரக்கன்றை, கிருஷ்ணராஜா எம்.எல்.ஏ., ஸ்ரீவத்சா நட்டார். வாரிய தலைவர் ஆயுப்கான், சமூக ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், கலந்து கொண்டனர்.
மரக்கன்றுகளை நட்டு அவைகளை காப்பாற்றி மரம் வளர்ப்பது; அதன் மூலமாக சுற்றுச்சூழல் காப்பாற்றுவது; செடிகளால் மக்களுக்கு ஏற்படும் பயன்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
வனத்துறை பாதுகாப்பு அதிகாரிகள் லட்சுமிகாந்த், சுரேந்திர உட்பட பலர் பங்கேற்றனர்.