48 மணி நேரத்தில் 57 செ.மீ., மழை; நிலச்சரிவுக்கு காரணம் இதுதான்!
48 மணி நேரத்தில் 57 செ.மீ., மழை; நிலச்சரிவுக்கு காரணம் இதுதான்!
ADDED : ஜூலை 31, 2024 11:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவனந்தபுரம்: வயநாடு முண்டக்கையில், 48 மணி நேரத்தில் 57 செ.மீ., மழை கொட்டியதுதான், நிலச்சரிவுக்கு காரணம் என தெரியவந்துள்ளது.
கேரளா மாநிலம் வயநாட்டில் கனமழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, மண்ணில் புதையுண்டு 168 பேர் உயிரிழந்தனர். மேலும் பலரை காணவில்லை.
இத்தகைய பாதிப்பு ஏற்படுவதற்கு, அங்கு பெய்த கனமழை தான் காரணம். கடந்த 48 மணி நேரத்தில், முண்டக்கையில் மட்டும் 57 செ.மீ., மழை பெய்துள்ளது. முதல் நாள் 20 செ.மீ., மழையும், மறுநாள் 37 செ.மீ., மழையும் பெய்துள்ளது.
இந்த மழைநீர், செம்மண் அடுக்குகளில் புகுந்து மண்ணை குழையச்செய்தது தான் நிலச்சரிவுக்கு காரணம் என்று கேரளா அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.