sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

திருப்பதியில் ரூ.100 கோடி உண்டியல் காணிக்கையை சுருட்டியவர்: 2 ஆண்டுக்கு பின் வெளிவந்த மோசடி

/

திருப்பதியில் ரூ.100 கோடி உண்டியல் காணிக்கையை சுருட்டியவர்: 2 ஆண்டுக்கு பின் வெளிவந்த மோசடி

திருப்பதியில் ரூ.100 கோடி உண்டியல் காணிக்கையை சுருட்டியவர்: 2 ஆண்டுக்கு பின் வெளிவந்த மோசடி

திருப்பதியில் ரூ.100 கோடி உண்டியல் காணிக்கையை சுருட்டியவர்: 2 ஆண்டுக்கு பின் வெளிவந்த மோசடி

35


ADDED : ஜூலை 31, 2024 11:09 AM

Google News

ADDED : ஜூலை 31, 2024 11:09 AM

35


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையில் பக்தர்கள் செலுத்திய வெளிநாட்டு கரன்சிகளை திருடிய தமிழகத்தை சேர்ந்தவர், ரூ.100 கோடி அளவிற்கு சொத்து சேர்த்துள்ளார். இந்த விவகாரம் 2 ஆண்டுகளுக்கு பிறகு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினசரி லட்சக்கணக்கான மக்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோயிலுக்கு வரும் பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள் மட்டும் தினமும் கோடிக்கணக்கில் வருவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் இருந்த ஒருவர் ரூ.100 கோடி அளவிற்கு மோசடி செய்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தமிழகத்தை சேர்ந்த ரவிக்குமார் என்பவர், திருமலை பெரிய ஜீயர் மடத்தில் வேலை செய்து வந்தார். அதன் வாயிலாக ஏற்பட்ட பழக்கத்தின் அடிப்படையில், அவரை சுமார் 20 ஆண்டுகளாக காணிக்கை பணம் கணக்கிடும் ஊழியர்களில் ஒருவராக தேவஸ்தான நிர்வாகம் நியமித்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, காணிக்கை பணம் எண்ணும் பகுதியில் இருந்து வெளியே வந்தபோது அவரின் நடவடிக்கையை கண்காணித்த தேவஸ்தான விஜிலென்ஸ் துறையினர் தீவிர சோதனைக்கு உட்படுத்தினர்.

ரூ.100 கோடி சொத்து


அப்போது அவர் தன்னுடைய மலக்குடலில் அமெரிக்க டாலர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சிகளை கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். தேவஸ்தானம் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவிக்குமாரை கைது செய்தனர்.

விசாரணையில், பல ஆண்டுகளாக திருப்பதி ஏழுமலையானுக்கு காணிக்கையாக கிடைக்கும் வெளிநாட்டு கரன்சிகளை திருடியதை ஒப்புக்கொண்ட ரவிக்குமார், அந்த பணத்தை பயன்படுத்தி சுமார் ரூ.100 கோடி அளவிற்கு தங்க நகைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், மாந்தோப்பு, தென்னந்தோப்பு என பல சொத்துகளை வாங்கி குவித்ததாகவும் கூறியுள்ளார்.

நன்கொடை


இந்த விவகாரம் வெளியே தெரிந்தால் பக்தர்களின் நம்பிக்கை கெட்டுவிடும் என்பதால், தேவஸ்தானம், லோக் அதாலத்திற்கு இந்த விஷயத்தை கொண்டு சென்றது. அப்போது, திருடிய காணிக்கை பணத்தை கொண்டு வாங்கிய சொத்துகளின் ஒரு பகுதியை ரவிக்குமார், தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக கொடுப்பதுபோல் எழுதி வாங்கியுள்ளனர். இதற்கு தேவஸ்தான அறங்காவலர் குழுவும் ஒப்புதல் அளித்துள்ளது.

இவ்வளவு நாட்கள் வெளியே தெரியாமல் இருந்த இந்த விவகாரம் பற்றி ஆந்திர மேல்சபை உறுப்பினர் ஒருவர், மாநில அறநிலையத்துறை அமைச்சர் ஆனம் விவேகானந்த ரெட்டியிடம் புகார் அளித்திருந்தார். இதையடுத்து ஆந்திர சட்ட மேல்சபையில் அமைச்சர் இந்த முறைகேடு குறித்து பேசியதை தொடர்ந்து, வெளிச்சத்துக்கு வந்துள்ளது.






      Dinamalar
      Follow us
      Arattai