ADDED : ஜூன் 06, 2024 07:31 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலக்காடு:கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், மண்ணார்க்காடு அருகே உள்ளது அட்டப்பாடி. வன எல்லையோர பகுதியான இங்கு, பாடவயல் முருகளா பழங்குடியின குடியிருப்பு பகுதியில் இருந்து, 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பக்கிமலை வனத்தில், இன்ஸ்பெக்டர் அஸ்வின்குமாரின் தலைமையிலான கலால் துறையினர், வனத்துறையின் உதவியுடன் நேற்று சோதனை நடத்தினர்.
அப்போது, அங்குள்ள அருவியின் இரு பக்கங்களில், 436 கஞ்சா செடிகள் பயிரிட்டு உள்ளதை கண்டுபிடித்தனர். மாதிரி செடிகள் எடுக்கப்பட்ட பின், மற்ற செடிகள் அனைத்தும் அழிக்கப்பட்டன. கஞ்சா செடிகள் 8 லட்சம் ரூபாய் மதிப்பு உள்ளதாகவும், இதன் பின்னணியில் யார் இருக்கின்றனர் என்பது குறித்து விசாரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.