கார் மீது டபுள் டெக்கர் பஸ் மோதல்: உ.பி.,யில் 6 பேர் பரிதாப பலி
கார் மீது டபுள் டெக்கர் பஸ் மோதல்: உ.பி.,யில் 6 பேர் பரிதாப பலி
ADDED : ஆக 04, 2024 09:40 AM

லக்னோ: உத்தரபிரதேசத்தில் கார் மீது டபுள் டெக்கர் பஸ் மோதி விபத்துக்குள்ளானது. 7 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயமுற்றனர்.
உத்தரபிரதேசத்தில், எட்டாவா மாவட்டத்தில் ஆக்ரா- லக்னோ விரைவு சாலையில் கார் மீது டபுள் டெக்கர் பஸ் மோதியது. விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நள்ளிரவில் விபத்து
எடாவா மாவட்ட எஸ்.பி சஸ்சய் குமார் வர்மா நிருபர்கள் சந்திப்பில்,'' ரேபரேலியில் இருந்து டில்லி நோக்கி சென்ற டபுள் டெக்கர் பஸ் நள்ளிரவு 12.30 மணியளவில் கார் மீது மோதியது. பஸ்சில் 60 பேர் பயணம் செய்ததில், 4 பேர் உயிரிழந்தனர். காரில் பயணம் செய்த 3 பேர் உயிரிழந்தனர். விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்,'' என தெரிவித்தார்.