லோக்சபா காங்., துணை தலைவராக கவுரவ் கோகோய் நியமனம்
லோக்சபா காங்., துணை தலைவராக கவுரவ் கோகோய் நியமனம்
ADDED : ஜூலை 14, 2024 11:51 PM

புதுடில்லி: லோக்சபா காங்கிரஸ் துணை தலைவராக, அக்கட்சியைச் சேர்ந்த அசாம் எம்.பி., கவுரவ் கோகோய் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், 10 ஆண்டுகளுக்கு பின், எதிர்க்கட்சி அந்தஸ்தை காங்., பெற்றுள்ளது.
இதையடுத்து, அக்கட்சியின் மூத்த தலைவர், ராகுல், லோக்சபா எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில், லோக்சபா காங்., துணை தலைவராக அக்கட்சியைச் சேர்ந்தவரும், அசாமின் ஜோர்ஹட் தொகுதி எம்.பி., யுமான கவுரவ் கோகோய் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
மேலும், எட்டு முறை எம்.பி.,யான கேரளாவின் கொடிக்குன்னில் சுரேஷ், காங்., தலைமை கொறடாவாகவும், தமிழகத்தின் விருதுநகர் எம்.பி,. மாணிக்கம் தாகூர், பீஹாரின் கிஷன்கஞ்ச் எம்.பி., முகமது ஜாவேத் ஆகியோர் கொறடாக்களாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நியமனங்கள் குறித்து, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு, காங்., - பார்லி., குழுத் தலைவர் சோனியா கடிதம் அனுப்பி உள்ளதாக, அக்கட்சியின் பொதுச்செயலரும், எம்.பி.,யுமான வேணுகோபால், சமூக வலைதளத்தில் நேற்று தெரிவித்தார்.