sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

முக்கிய அம்சங்கள்

/

முக்கிய அம்சங்கள்

முக்கிய அம்சங்கள்

முக்கிய அம்சங்கள்


ADDED : ஜூலை 24, 2024 01:31 AM

Google News

ADDED : ஜூலை 24, 2024 01:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அடிப்படை கட்டமைப்பு

 ஊரக வளர்ச்சி உட்கட்டமைப்புக்கு, 2.66 லட்சம் கோடி ரூபாய்

 நாடு முழுதும், 12 தொழிற்பூங்காங்கள் உருவாக்கப்படும்

 சென்னை - விசாகபட்டினம், ஹைதராபாத் - பெங்களூரு தொழில் வழித்தடம் அமைக்கப்படும்

 புதிதாக, 100 உணவு தர பாதுகாப்பு சோதனை மையங்கள் துவங்கப்படும்.

'ஜாக்பாட்' மாநிலங்கள்

 ஆந்திராவின் அமராவதி நகர வளர்ச்சி கட்டமைப்புக்கு சிறப்பு நிதியாக 15,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு

 விமான நிலையங்கள், மருத்துவ கல்லுாரிகள் அமைக்க பீஹாருக்கு 26,000 கோடி ரூபாய் சிறப்பு நிதி

 பீஹார் மாநிலத்தில் வெள்ளத்தடுப்பு நிவாரண நிதிக்கு, 11 ஆயிரம் கோடி ரூபாய்

 பீஹாரில், 2,400 மெகாவாட் மின்சார உற்பத்திக்கு மின் ஆலைகள் அமைக்க 21,400 கோடி ரூபாய்

 அசாம், ஹிமாச்சல், உத்தரகண்ட், சிக்கிமில் வெள்ள பாதிப்புகளுக்கு உதவி வழங்கப்படும்.

சொந்த வீடு கனவு

 பிரதமரின் வீடு கட்டும் திட்டத்துக்கு 10 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு. இந்த திட்டத்தின் கீழ், மேலும் மூன்று கோடி வீடுகள் கட்டப்படும்

 1.28 கோடி விண்ணப்பங்கள் வந்துள்ளதால், 'ஒரு கோடி வீடுகளில் சோலார் மின்சாரம்' வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்படும்.

பெண்கள் முன்னேற்றம்

 மகளிர், பெண் குழந்தைகள் மேம்பாட்டுக்கு, 3 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு

 பெண்கள் பெயரில் வாங்கும் சொத்துகளுக்கு, முத்திரைத்தாள் கட்டணத்தை குறைக்க மாநிலங்களுக்கு வலியுறுத்தப்படும்.

தொழில் வளர்ச்சி

 சிறு, குறு, நடுத்தர தொழில்துறையை மேம்படுத்த, இந்தாண்டு 24 சிறுதொழில் வளர்ச்சி வங்கி - சிட்பி கிளைகள் துவங்கப்படும்

 பிற மாநிலங்களுக்கு சென்று பணியாற்றும் தொழிலாளர்களுக்கு, குறைந்த செலவில் அரசு - தனியார் பங்களிப்பில் தங்குமிடம் அமைக்கப்படும்

 முதலீட்டாளர்களுக்கான 'ஏஞ்சல் வரி' ரத்து

 வடகிழக்கு மாநிலங்களில் புதிதாக, 100 தபால் நிலைய வங்கிக் கிளைகள் துவங்கப்படும்.

இளைஞர் நலன்

 கல்வி, வேலைவாய்ப்பு, திறன் துறைக்கு 1.48 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு.

 ஐந்து ஆண்டுகளில், 500 முன்னணி நிறுவனங்களில், ஒரு கோடி பேருக்கு ஒருமுறை ஊக்கத்தொகை 6,000 ரூபாய், மாதம் 5,000 ரூபாய் ஊதியத்துடன் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும்

 சிறு தொழில் செய்பவர்களுக்கான முத்ரா கடன் திட்டத்தின் 'தருண்' பிரிவில், ஏற்கனவே 10 லட்சம் ரூபாய் பெற்று திருப்பி செலுத்தியவர்களுக்கு கடன் தொகை, 10 லட்சம் ரூபாயில் இருந்து 20 லட்சம் ரூபாயாக அதிகரிப்பு

 உள்நாட்டில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கான கல்விக்கடன், 10 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும்

 தொழிலாளர் வைப்பு நிதியில் முதன்முறை சேரும் பணியாளருக்கு முதல் மாத ஊதியம், மூன்று தவணைகளில் அதிகபட்சம் 15,000 ரூபாய் மானியமாக வழங்கப்படும்.

விவசாயம்

 அடுத்த இரண்டு ஆண்டுகளில், ஒரு கோடி பேருக்கு இயற்கை விவசாயம் குறித்த பயிற்சி வழங்கப்படும்

 கடுகு, நிலக்கடலை, எள், சோயாபீன், சூரியகாந்தி உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்

 விண்வெளி பொருளாதார வளர்ச்சியை 10 ஆண்டுகளில் 5 மடங்கு உயர்த்த, 1,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு

 கடந்த நிதியாண்டில் இதுவரை இல்லாத அளவாக கடல்சார் உணவு 60,000 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி.

வரி சலுகை

 புதிய வருமான வரி திட்டத்தில் நிலையான கழிவு 50,000 ரூபாயில் இருந்து 75,000 ரூபாயாக உயர்வு

 குடும்ப பென்ஷன் திட்டத்தின் மீதான நிலையான கழிவு, 15,000 ரூபாயில் இருந்து 25,000 ரூபாயாக உயர்வு

 வருமான வரி தாமதமாக தாக்கல் செய்வது, இனி குற்றமாக கருதப்படாது.






      Dinamalar
      Follow us