UPDATED : ஜூலை 24, 2024 05:06 AM
ADDED : ஜூலை 24, 2024 01:33 AM

அனைத்து தரப்பு மக்களுக்கும் அதிகாரம் அளிக்கும் வகையில் பட்ஜெட் உள்ளது. சிறந்த வளர்ச்சி மற்றும் பிரகாசமான எதிர்காலத்தை பிரதிபலிக்கிறது. நாட்டை வளர்ச்சியின் புதிய உயரங்களுக்கு இந்த பட்ஜெட் எடுத்துச் செல்லும். மேலும், கிராமங்களைச் சேர்ந்த ஏழை விவசாயிகளை செழிப்புக்கான பாதையில் கொண்டு செல்லும்.
நரேந்திர மோடி
பிரதமர்
நாற்காலியை காப்பாற்றும் பட்ஜெட்!
பா.ஜ.,வின் நாற்காலியை காப்பாற்றிக் கொள்ளும் பட்ஜெட் இது. மற்ற மாநிலங்களின் பணத்தில், தன் கூட்டணி மாநிலங்களுக்கு வெற்று வாக்குறுதியை பா.ஜ., கொடுத்துள்ளது. சாதாரண குடிமக்களுக்கு பட்ஜெட்டில் எந்த நிவாரணமும் இல்லை. காங்., தேர்தல் அறிக்கையை காப்பி அடித்துள்ளனர்.
ராகுல்
லோக்சபா எதிர்க்கட்சி தலைவர், காங்.,
உதவுவதாக அரசு உறுதி!
துவக்கத்தில் இருந்தே, பீஹாருக்கு சிறப்பு அந்தஸ்து அல்லது சிறப்பு தொகுப்பு வழங்க வேண்டும் என, கோரிக்கை வைத்து வருகிறேன். தற்போது சிறப்பு தொகுப்பை அறிவித்து பல்வேறு திட்டங்களுக்கு உதவுவதாக மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. இது வரவேற்கத்தக்கது.
நிதீஷ் குமார்
பீஹார் முதல்வர், ஐக்கிய ஜனதா தளம்