ADDED : ஜூன் 03, 2024 11:46 PM
புதுடில்லி: 'தமிழ் மக்களுக்காகவும், தமிழக வளர்ச்சிக்காகவும் பாடுபட்டவர் கருணாநிதி' என, பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டி உள்ளார்.
மறைந்த தி.மு.க., தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதியின், பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி நேற்று வெளியிட்ட பதிவில் கூறியதாவது:
கருணாநிதியின் 100வது பிறந்த நாளில், நான் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். தன் நீண்டகால பொது வாழ்க்கையில், தமிழ் மக்களுக்காகவும், தமிழக வளர்ச்சிக்காகவும் அவர் பாடுபட்டார்.
தன் அறிவார்ந்த இயல்புக்காக அவர் பெரிதும் மதிக்கப்படுகிறார். தத்தமது மாநிலங்களில் நாங்கள் இருவரும் முதல்வர்களாக இருந்தது உள்ளிட்ட பல்வேறு சந்தர்ப்பங்களில், அவருடனான என் பரிமாற்றங்களை நான் வாஞ்சையோடு நினைவுகூர்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.