ADDED : ஜூலை 22, 2024 06:22 AM

பெங்களூரு: ஸ்ரீமத் வீரசைவ சத்போதனா அமைப்பு சார்பில், ரம்பாபுரி ஜகத்குருவின், 22ம் ஆண்டு இஷ்டலிங்க மஹாபூஜை நாளை மறுதினம் நடக்கவுள்ளது.
இது தொடர்பாக, அமைப்பு சார்பில் வெளியிட்ட அறிக்கை:
பெங்களூரு, விஜயநகரின் ஹொசஹள்ளி மெட்ரோ ரயில் நிலையம் அருகில் உள்ள பசவேஸ்வரா மண்டபத்தில், வரும் 24 முதல் 26ம் தேதி வரை, ரம்பாபுரி ஜகத்குருவின், 22ம் ஆண்டு இஷ்டலிங்க மஹாபூஜை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மூன்று நாட்கள், தினமும் இஷ்டலிங்க பூஜைகள் நடக்கும். இது மட்டுமின்றி வெவ்வேறு வழிபாடுகள் நடக்கும். நிகழ்ச்சிக்கு பின், பக்தர்களுக்கு அன்னதான பிரசாதம் வினியோகிக்கப்படும்.
பூஜைகளில், மத்திய அமைச்சர்கள் சோமண்ணா, ஷோபா, துணை முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் ஈஸ்வர்கன்ட்ரே, போசராஜு உட்பட பல முக்கியஸ்தர்கள், மடாதிபதிகள் பங்கேற்கின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.