UPDATED : ஆக 06, 2024 05:48 AM
ADDED : ஆக 05, 2024 11:59 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி,: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டிற்கு சமூக வலைதளம் வாயிலாக கொலை மிரட்டல் விடுத்தாக ம.பி.யைச் சேர்ந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
எஸ்.சி., எனப்படும் பட்டியலின பிரிவினருக்கான இட ஒதுக்கீடு வழக்கு தொடர்பாக தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான ஏழு நீதிபதிகள் அடங்கிய அரசியல் சட்ட அமர்வு உள்இடஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என, கடந்த 1-ம் தேதி உத்தரவிட்டது.
இந்நிலையில் இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக உத்தரவிட்டதை கண்டித்து சந்திர சூட்டிற்கு சமூக வலைதளம் வாயிலாக கொலை மிரட்டல் விடுத்த நபரை மத்தியபிரதேச மாநிலம் பீட்துல் கஞ்ச் போலீசார், புதிய குற்றவியல் விதிகளின் எப்.ஐ.ஆர்., வழக்குப்பதிந்து . விசாரணை நடத்தி வருகின்றனர்.