ADDED : ஜூலை 31, 2024 01:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நீலகிரி மாவட்டம், கூடலுார் மரப்பாலம் அட்டிகொல்லி பகுதியைச் சேர்ந்தவர் காளிதாஸ், 32. இவர் கடந்து இரண்டு நாட்களாக வயநாட்டில் உள்ள தாய்மாமன் வீட்டில் தங்கி, கட்டட பணி மேற்கொண்டு வந்தார்.
நேற்று அதிகாலை ஏற்பட்ட, நிலச்சரிவில் இவர் தங்கி இருந்த வீடும் அடித்துச் செல்லப்பட்டது. அதில் காளிதாஸ் உயிரிழந்தார். இதேபோல, அய்யன்கொல்லி பகுதியைச் சேர்ந்த பூஜாரி கல்யாணகுமார் என்பவரும் பலியாகினர். இருவர் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.