அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டை முன்னேற்றுவார்கள்: அனுராக் தாக்கூர் பேட்டி
அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டை முன்னேற்றுவார்கள்: அனுராக் தாக்கூர் பேட்டி
UPDATED : ஜூன் 09, 2024 05:44 PM
ADDED : ஜூன் 09, 2024 05:36 PM

புதுடில்லி: 'பிரதமர் மோடி மற்றும் அவரது அமைச்சர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். அவர்கள் அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டை முன்னேற்றுவார்கள்' என பா.ஜ., எம்.பி அனுராக் தாக்கூர் கூறினார்.
டில்லியில் நிருபர்கள் சந்திப்பில் அனுராக் தாக்கூர் கூறியதாவது: மோடி 3வது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார். பிரதமர் மோடி மற்றும் அவரது அமைச்சர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். அவர்கள் சிறப்பாக பணி செய்து, அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டை முன்னேற்றுவார்கள்.
மக்கள் பணி
மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க, பல வெளிநாட்டு தலைவர்கள் இன்று டில்லி வந்துள்ளனர். நான் முன்பு எம்.பி.யாக இருந்தேன். இன்றும் எம்.பி.யாக இருக்கிறேன். நான் பல நாட்களாக பா.ஜ., கட்சியின் தொண்டராக இருந்து வருகிறேன். கட்சி தொண்டராக இருந்து தொடர்ந்து மக்கள் பணியாற்றுவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.