கழுகு மோதி விமானம் சேதம் 175 பயணியர் உயிர் தப்பினர்
கழுகு மோதி விமானம் சேதம் 175 பயணியர் உயிர் தப்பினர்
ADDED : ஜூன் 03, 2025 04:11 AM

ராஞ்சி: பாட்னா - கொல்கட்டா இடையே, 4,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த, 'இண்டிகோ' விமானத்தின் மீது கழுகு மோதியதால் ராஞ்சி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
பீஹாரின் பாட்னாவில் இருந்து மேற்கு வங்கத்தின் கொல்கட்டா நோக்கி, 'இண்டிகோ' நிறுவனத்துக்கு சொந்தமான பயணியர் விமானம் நேற்று புறப்பட்டது.
அதில், 175 பயணியர் இருந்தனர். ராஞ்சி அருகே, 4,000 அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருந்த போது கழுகு மோதியது.
இதனால் விமானத்தின் முன்புறத்தில் சேதம் ஏற்பட்டது. நிலைமையை உணர்ந்த விமானிகள், பயணியர் பாதுகாப்பு கருதி விமானத்தை உடனடியாக தரையிறக்க முடிவு செய்தனர். இதையடுத்து ராஞ்சி பிர்சா முண்டா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இந்த சம்பவத்தில் பயணியருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என, இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது. விமானத்தில் ஏற்பட்ட சேதம் குறித்து பொறியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.