ADDED : மார் 16, 2025 02:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சித்தாபூர்: உத்தர பிரதேச மாநிலம் சித்தாபூர் மாவட்டத்தில் உள்ள ரத்தன்கஞ்ச் பகுதியில் ஷர்தா என்ற ஆறு பாய்கிறது. நேற்று முன்தினம் ஹோலி கொண்டாடிய தினேஷ் குப்தா, 22, ஆற்றில் மூழ்கி இறந்தார்.
அவரது உடலை தகனம் செய்வதற்காக படகில் ஆற்றின் மறுகரைக்கு எடுத்துச் சென்றனர். அப்போது 16 பேர் அந்த படகில் இருந்தனர்.
திடீரென படகு கவிழ்ந்து ஆற்றில் அனைவரும் மூழ்கினர். இதில் மூவர் பலியாகினர்.
தகவல் அறிந்த உள்ளூர் மக்கள் மற்றும் நீச்சல் வீரர்கள் விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். அவர்கள், ஏழு பேரை மீட்டு கரை சேர்த்தனர்.
மாயமான மற்றவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.