ADDED : பிப் 05, 2024 11:04 PM

சி.வி.ராமன் நகர்: டி.ஆர்.டி.ஓ., பொங்கல் சங்கமம் மற்றும் தமிழ் இணைய கல்விக்கழகம் இணைந்து நடத்திய தமிழ் மொழித் தேர்வில், 300 மாணவர்கள் பங்கேற்றனர்.
பெங்களூரு சி.வி.ராமன் நகரில், ராணுவ தளவாடங்கள் தயாரிக்கும், டி.ஆர்.டி.ஓ., எனும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் இயங்குகிறது.
இந்நிறுவனத்தில், தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், ஊழியர்கள் பலர் பணிபுரிகின்றனர். இவர்கள் ஒன்றிணைந்து, 2004 முதல், 'டி.ஆர்.டி.ஓ., பொங்கல் சங்கமம்' என்ற அமைப்பு நடத்தி வருகின்றனர்.
மேலும், தமிழ் இணைய கல்விக்கழகம் இணைந்து, பெங்களூரு வாழ் தமிழ் மாணவர்களுக்கான தமிழ் மொழித் கற்று தரப்படுகிறது.
படிப்பு முடித்த மாணவர்களுக்கு, நேற்று முன்தினம் சி.வி.ராமன் நகரில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நடத்தப்பட்டது. இதில், 300 மாணவ - மாணவியர் தேர்வு எழுதினர்.
டி.ஆர்.டி.ஓ., பொங்கல் சங்கமம் தலைவர் ரமேஷ் கூறியதாவது,
இதன் மூலம் புலம்பெயர் தமிழர்களின் பிள்ளைகள், இணைய கல்வி வழியாக தாய்மொழி கற்கும் வாய்ப்பை பெற்றனர்.
பெங்களூரு தமிழர்கள் தமிழ் பயில www.dpstamilteachers@gmail.com அல்லது 93421 90017 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.