30 ஆண்டுகளாக திருவிழா நாட்களில் 'சர்க்கரை அச்சு' செய்யும் குடும்பம்
30 ஆண்டுகளாக திருவிழா நாட்களில் 'சர்க்கரை அச்சு' செய்யும் குடும்பம்
ADDED : ஜன 27, 2024 11:04 PM

மைசூரில் 30 ஆண்டுகளாக 'சர்க்கரை அச்சு' தயாரிக்கும் குடும்பத்தினர். இவர்கள் தயாரிக்கும் 'சர்க்கரை அச்சு'வை வாங்க, பல பகுதிகளில் இருந்தும் வாடிக்கையாளர்கள் வருகின்றனர்.
மைசூரு ராமசந்திர அக்ரஹாராவில், 101 கணபதி கோவில் அருகில் அமைந்து உள்ளது தாசப்பா அண்ட் சன்ஸ் கடை. மஞ்சுநாத் என்பவர் நடத்தி வருகிறார். இங்கு கடந்த 30 ஆண்டுகளாக திருவிழா நாட்களில் 'சர்க்கரை அச்சு' தயாரிக்கின்றனர்.
இப்பகுதியில் இதுபோன்று பல கடைகள் உள்ளன. இவர்களிடம் செய்யப்படும் 'சர்க்கரை அச்சு'களை வாங்குவதற்கு, நகரின் பல பகுதிகளில் இருந்தும் வாடிக்கையாளர்கள் வருகின்றனர்.
இந்த சர்க்கரை அச்சுவை வாயில் வைத்தவுடன் கரைந்து விடுகிறது. ஒரே விதமான வடிவில் இல்லாமல், குதிரை, யானை, மண்டபம் போன்று பல வடிவங்களில் அச்சுகள் தயாரிக்கின்றனர்.
இதனால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுகின்றனர். பசவண்ணா உருவில் தயாரிக்கப்படும் அச்சுக்கு அதிக டிமாண்ட் உள்ளது. 1 கிலோ அச்சு, 200 ரூபாய்க்கு விற்கின்றனர்.
திருவிழா நாட்களில் குறிப்பாக, பொங்கலுக்கு முன் ஒன்பது நாட்கள் 'சர்க்கரை அச்சு' தயாரிப்பர்.
நாள் ஒன்றுக்கு விதவிதமான 2,000 அச்சுகளை தயாரிக்கின்றனர்.
இதில், மஞ்சுநாத் மனைவியும், பாட்டியும் இணைந்து சர்க்கரை அச்சுகளை தயாரிக்கின்றனர்.