சென்னையில் இருந்து மும்பை சென்ற விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னையில் இருந்து மும்பை சென்ற விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
UPDATED : ஜூன் 01, 2024 01:44 PM
ADDED : ஜூன் 01, 2024 12:49 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மும்பை: சென்னையில் இருந்து மும்பை சென்ற இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. மும்பையில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டு, பயணிகள் பத்திரமாக வெளியே அழைத்து வரப்பட்டனர்.
விமானம் தனிமைபடுத்தப்பட்டு தீவிரமாக சோதனை செய்யப்பட்டது. அதில் சந்தேகப்படும்படியான பொருள் ஏதும் சிக்கவில்லை. இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும். கடந்த வாரம் டில்லியில் இருந்து வாரணாசி சென்ற இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
நேற்று, டில்லியில் இருந்து ஸ்ரீநகர் சென்ற விஸ்தாரா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.