ADDED : ஜூன் 01, 2024 12:42 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: 'ஜூன் 4ம் தேதி சூரியன் புதிய விடியலைக் கொண்டு வரப் போகிறது' என காங்கிரஸ் எம்.பி ராகுல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் ராகுல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இதுவரை நடந்த ஓட்டுப்பதிவின் படி, இண்டியா கூட்டணி ஆட்சி அமைக்க போகிறது என்பது தெளிவாக தெரிகிறது. கொளுத்தும் வெயிலிலும், ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்ற மக்கள் ஓட்டளித்தனர். இதற்கு நான் பெருமைப்படுகிறேன்.
இன்று பெருந்திரளாக வந்து ஆணவம் மற்றும் கொடுங்கோன்மையின் அடையாளமாக மாறியுள்ள இந்த அரசுக்கு இறுதி அடியாக உங்கள் ஓட்டுகளை செலுத்துங்கள். ஜூன் 4ம் தேதி சூரியன் புதிய விடியலைக் கொண்டு வரப் போகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் ராகுல் கூறியுள்ளார்.