ADDED : ஜூன் 24, 2025 12:04 AM

உலகம் முழுதும் பருவநிலை மாற்றத்தை
எதிர்கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது. நிலைத்தன்மை என்பது இனி முழக்கமாக
இருக்கக்கூடாது; அது அவசிய தேவையாகிவிட்டது. கார்ப்பரேட் நிறுவனங்கள்,
தங்கள் செயல்பாடுகளை லாப நோக்குடன் அணுகாமல், சுற்றுச்சூழல் பாதிப்புகளை
கருத்தில் கொள்ள வேண்டும்.
திரவுபதி முர்மு
ஜனாதிபதி
அடுத்த இலக்கு!
எண்ணெய் வளங்களை குறிவைத்து தாக்குதல்களை அரங்கேற்றும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் அடுத்த இலக்கு, அரபு நாடுகள் தான். மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்தால், அனைத்து நாடுகளின் பொருளாதார நிலையும் கடுமையாக பாதிக்கப்படும். எனவே, உலக நாடுகள் இதை தடுத்து நிறுத்த வேண்டும்.
பரூக் அப்துல்லா
தலைவர், தேசிய மாநாட்டு கட்சி
மக்கள் மன்னிக்க மாட்டார்கள்!
பஹல்காம் தாக்குதல் தொடர்பாக இருமுறை நடந்த அனைத்து கட்சிக் கூட்டங்களில், பிரதமர் மோடி பங்கேற்காதது ஏன்?. ஒருபுறம், எல்லையில் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்; மறுபுறம், பீஹார் தேர்தல் பிரசாரத்தில் மோடி பங்கேற்க செல்கிறார். இச்செயலை, பொதுமக்கள் ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்.
மல்லிகார்ஜுன கார்கே
தேசிய தலைவர், காங்கிரஸ்