ADDED : மார் 20, 2025 10:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பிரகதி மைதான்:இனப்பெருக்கத்துக்காக டில்லி மிருகக்காட்சி சாலைக்குக் கொண்டு வரப்பட்ட பெண் செந்நாய், திடீரென உயிரிழந்தது.
செந்நாய்கள், தென்கிழக்கு ஆசியாவை பூர்வீகமாகக் கொண்டவை. நரி போன்ற அம்சங்களுடன் காணப்படும் காட்டு பெண் செந்நாய், விலங்கு பரிமாற்ற திட்டத்தின் ஒரு பகுதியாக 2019ல் விசாகப்பட்டினத்திலிருந்து டில்லி மிருகக்காட்சி சாலைக்கு கொண்டு வரப்பட்டது.
இனப்பெருக்க நோக்கங்களுக்காக கொண்டு வரப்பட்ட இது, நேற்று முன் தினம் இறந்தது. ஒன்பது வயதான பெண் செந்நாய் இறப்புக்கான காரணம் தெரியவில்லை.
தற்போது, மிருகக்காட்சி சாலையில் ஆண் செந்நாய் மட்டுமே எஞ்சியுள்ளது.