UPDATED : ஜூன் 06, 2024 09:13 PM
ADDED : ஜூன் 06, 2024 09:04 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: டில்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டில்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடக்கிறது. முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். இந்நிலையில் ஆம் ஆத்மி பதவி காலம் 2025-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நிறைவடைய உள்ளது.
இதையடுத்து வரப்போகும் சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி தனித்து போட்டியிட உள்ளதாகவும் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என ஆம் ஆத்மி அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.