தெலுங்கானாவில் 10 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி சபாநயகரிடம் மனு
தெலுங்கானாவில் 10 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி சபாநயகரிடம் மனு
UPDATED : ஜூலை 16, 2024 07:13 PM
ADDED : ஜூலை 16, 2024 07:05 PM

ஐதராபாத்: தெலுங்கானாவில் மாற்று கட்சியில் ஐக்கியமாகியுள்ள பி.ஆர்.எஸ். கட்சி எம்.எல்.ஏ.க்கள் 10 பேரை தகுதி நீக்கம் செய்யக்கோரி சபாநாயகரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
தெலுங்கானாவில் கடந்தாண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மை பெற்று ஆட்சியை கைப்பற்றியது. முதல்வராக ரேவந்த் ரெட்டி பதவியேற்றார். பிரதான எதிர்க்கட்சியான சந்திரசேகர ராவின் பி.ஆர்.எஸ். எனப்படும் பாரதிய ரஷ்ட்ரீய சமிதி கட்சியைச் சேர்ந்த 39 எம்.எல்.ஏ.க்களில் 10-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் மாற்றுகட்சிக்கு தாவினர்.
இந்நிலையில் பி.ஆர்.எஸ். கட்சி செயல் தலைவர் கே.டி.ராமாராவ் தலைமையிலான நிர்வாகிகள் இன்று சட்டசபை சபாநாயகர் கதாம் பிரசாத் குமாரை சந்தித்து மனு அளித்தனர். அதில் தங்கள் கட்சியைச் சேர்ந்த 10 எம்.எல்.ஏ.க்கள் மாற்று கட்சியில் இணைந்துள்ளனர்.
இவர்கள் மீது கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும். இது தொடர்பாக பல்வேறு உச்சநீதிமன்ற தீர்ப்புகள் வெளியாகியுள்ளதாக மேற்கோள் காட்டியுள்ளனர்.
சபாநாயகர் உரிய நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம். இல்லையெனில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என கே.டி.ராமாராவ் கூறினார்.