sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

நாடு முழுவதும் மின்னணு போர்க்கருவிகள் சோதனை: ராணுவம் அறிவிப்பு

/

நாடு முழுவதும் மின்னணு போர்க்கருவிகள் சோதனை: ராணுவம் அறிவிப்பு

நாடு முழுவதும் மின்னணு போர்க்கருவிகள் சோதனை: ராணுவம் அறிவிப்பு

நாடு முழுவதும் மின்னணு போர்க்கருவிகள் சோதனை: ராணுவம் அறிவிப்பு

3


UPDATED : மே 31, 2025 06:54 PM

ADDED : மே 31, 2025 06:35 PM

Google News

3

UPDATED : மே 31, 2025 06:54 PM ADDED : மே 31, 2025 06:35 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: நாடு முழுவதும் போர் சோதனைகளில் தற்கொலைப்படை ட்ரோன்கள், மின்னணு போர் கருவிகளை இந்திய ராணுவம் வெற்றிகரமாக சோதனை செய்து முடித்துள்ளது.

இந்திய ராணுவம், தற்கால போர் முறைகளுக்கு ஏற்ப நாட்டின் பல்வேறு பகுதிகளில் தற்கொலைப்படை ட்ரோன்கள் , மின்னணு போர்க்கருவிகள் மற்றும் ஸ்மார்ட் ஆயுதங்களை விரிவான பயிற்சி மற்றும் சோதனைகளுக்கு உட்படுத்தியுள்ளது.

இந்த முயற்சி சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளின் அச்சுறுத்தல்களுக்கு பதிலளிப்பதற்கான தயார்நிலையை உறுதிப்படுத்துவதற்கான ஒரு பயிற்சி ஆகும்.

இது குறித்து பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை:

மத்திய அரசின் ஆத்மநிர்பர் பாரத் முன்முயற்சியின் கீழ் உருவாக்கப்பட்ட பல்வேறு மேம்பட்ட தொழில்நுட்பங்கள், இந்த பயிற்சி மற்றும் சோதனைகளில் இடம்பெற்றுள்ளன.

அதன்படி, போக்ரான் கள துப்பாக்கி சூடு தளங்கள், பாபினா கள துப்பாக்கி சூடு தளங்கள் மற்றும் ஜோஷிமத் உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள முக்கிய இடங்களில் விரிவான திறன் மேம்பாட்டு போர் பயிற்சி மற்றும் சோதனைகள் நடைபெற்றது.

இந்த மதிப்பீட்டிற்கு உட்பட்ட தளங்களில் ஆளில்லா வான்வழி அமைப்புகள் , துல்லிய வழிகாட்டப்பட்ட ஏவுகணைகள், தற்கொலைப்படை ட்ரோன்கள், துல்லிய பல ஆயுத விநியோக அமைப்புகள், ஒருங்கிணைந்த ட்ரோன் இடைமறிப்பு அமைப்பு , குறைந்த அளவிலான இலகுரக ரேடார்கள், இதர மின்னணு போர்க்கருவிகள் ஆகியவை அடங்கும்.

ஆக்ரா மற்றும் கோபால்பூரில் பிரத்யேக வான் பாதுகாப்பு உபகரண சேதனைகளும் திட்டமிடப்பட்டுள்ளன.

அதிநவீன பாதுகாப்பு அமைப்புகளின் செயல்திறனை கடுமையாக மதிப்பிடுவதற்கு வசதியாக, மின்னணு போர் உருவகப்படுத்துதல்களை ஒருங்கிணைத்து கள சோதனைகள் நடத்தப்படுகின்றன.

வளர்ந்து வரும் போர்க்களத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை விரைவாக உள்வாங்குவதை உறுதிசெய்ய இந்த பயிற்சி அவசியாகிறது.

இவ்வாறு பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us