ADDED : ஜூன் 30, 2024 09:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஐதராபாத்: ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்., சிலை தீ வைத்து எரிக்கப்பட்டதால் அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது. சமீபத்திய தேர்தலில் தெலுங்குதேசம் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்துள்ளது. இது முதல் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் கட்டடம் ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டதாக இடிக்கப்பட்டது.
கண்டித்து போராட்டம்
இந்நிலையில் பபத்தலா மாவட்டத்தில் வெமுரு என்ற பகுதியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஒய்.ராஜசேகர ரெட்டியின் சிலைக்கு மர்ம நபர்கள் தீ வைத்து எரித்துள்ளனர். இதனை கண்டித்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளனர்.