இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: 190 ரன்கள் முன்னிலை பெற்றது இந்தியா
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: 190 ரன்கள் முன்னிலை பெற்றது இந்தியா
ADDED : ஜன 27, 2024 10:58 AM

ஐதராபாத்: இங்கிலாந்து அணிக்கு எதிராக ஐதராபாத் நகரில் நடக்கும் முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி முதல் இன்னிங்சில் 436 ரன்கள் குவித்தது. இதன் மூலம் 190 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ஐதராபாத்தில் நடக்கிறது. முதல் நாள் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 246 ரன்கள் எடுத்தது. இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 421 ரன்கள் எடுத்து இருந்தது.
3ம் நாள் ஆட்டம் இன்று துவங்கிய நிலையில், இந்திய அணி 436 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஜடேஜா 87, அக்சர் படேல் 44, பும்ரா ரன் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். இதன் மூலம் இந்திய அணி 190 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சை துவக்கி உள்ளது.

