ஜூன் 25 அரசியல் சாசன படுகொலை தினம்: மத்திய அரசு அறிவிப்பு
ஜூன் 25 அரசியல் சாசன படுகொலை தினம்: மத்திய அரசு அறிவிப்பு
UPDATED : ஜூலை 12, 2024 05:05 PM
ADDED : ஜூலை 12, 2024 05:04 PM

புதுடில்லி: எமர்ஜென்சி கொண்டு வரப்பட்ட ஜூன் 25ம் தேதி அரசியல் சாசன படுகொலை தினமாக (சம்விதான் ஹத்ய திவாஸ் )கடைப்பிடிக்கப்படும் எனவும், நெருக்கடி நிலையால் பாதிக்கப்பட்டோருக்கு ஆண்டுதோறும் இதே தினத்தில் அஞ்சலி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்து உள்ளது.
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியுள்ளதாவது: 1975 ம் ஆண்டு ஜூன் 25 ல் அப்போதைய பிரதமர் இந்திரா, சர்வாதிகாரத்தின் வெளிப்பாடாக நாட்டின் மீது எமர்ஜென்சியை திணித்து நமது ஜனநாயகத்தின் ஆன்மாவை நெரித்தார். எந்தத் தவறும் செய்யாத நமது லட்சக்கணக்கான மக்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். ஊடகங்கள் குரல் ஒடுக்கப்பட்டது.