தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடகா மறுப்பு
தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடகா மறுப்பு
ADDED : ஜூலை 12, 2024 05:21 PM

பெங்களூரு: ‛‛ தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட முடியாது '' என கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.
தமிழகத்திற்கு நாள் ஒன்றுக்கு ஒரு டி.எம்.சி., தண்ணீர் திறந்துவிட காவிரி நீர் ஒழுங்காற்று குழு உத்தவிட்டது. இது தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையா, அவசர ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் துணை முதல்வர் டிகே சிவக்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பிறகு சித்தராமையா கூறியதாவது: காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரையை செயல்படுத்த முடியாது. கர்நாடகாவின் வலியுறுத்தலை மீறி தண்ணீர் திறந்து விட பரிந்துரை செய்துள்ளது. காவிரி பாசன பகுதியில் 28 சதவீத தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது.
காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது. காவிரி விவகாரம் குறித்து பரிசீலனை செய்ய வரும் 14ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடக்கும். கர்நாடகாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், எம்.பி.,க்களுக்கு அழைப்பு விடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.