ADDED : மே 14, 2025 11:55 PM

சத்தீஸ்கர்- - தெலுங்கானா எல்லையில் 21 நாட்கள் நடந்த நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் 31 நக்சல்கள் கொல்லப்பட்டனர். நம் படைவீரர்கள் ஒருவர் கூட பலியாகவில்லை. நக்சல் இல்லாத நாட்டை உருவாக்குவதில் பாதுகாப்பு படையினரின் இந்த நடவடிக்கை முக்கிய மைல்கல்.
அமித் ஷா, மத்திய அமைச்சர், பா.ஜ.,
விளக்கம் தேவை!
நம் நாடு பல போர்களை சந்தித்துஇருக்கிறது. ஆனால், முதன்முறையாக அமெரிக்க அதிபர் போர் நிறுத்தத்தை அறிவித்தார். அதில் மையப் பிரச்னையான பயங்கரவாதம் பற்றி அவர் குறிப்பிடாமல், காஷ்மீர் பிரச்னையை இழுத்துள்ளார். மத்திய அரசு இதுகுறித்த தன் நிலைப்பாட்டை தெளிவாக விளக்க வேண்டும்.
சச்சின் பைலட், பொதுச்செயலர், காங்கிரஸ்
பாகிஸ்தான் ஆதரவு!
பஹல்காம் தாக்குதல் ஒரு கொடூரமான பயங்கரவாத செயல். ஆனால், 'இண்டி' கூட்டணி அதற்கு பாகிஸ்தானை பொறுப்பாக்காமல், நம் பதிலடி நடவடிக்கைகளை விமர்சிக்கிறது. போர் நிறுத்தத்தை கேள்வி எழுப்புவதன் வாயிலாக, அவர்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர்.
செஷாத் பூனாவாலா, செய்தித் தொடர்பாளர், பா.ஜ.,