நீட் தேர்வு முறைகேடு: ஜூன் 21ல் காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம்
நீட் தேர்வு முறைகேடு: ஜூன் 21ல் காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம்
UPDATED : ஜூன் 19, 2024 01:10 PM
ADDED : ஜூன் 19, 2024 12:17 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: நீட் தேர்வில் முறைகேடு நடைபெற்றது தொடர்பாக ஜூன் 21ல் நாடு முழுவதும் உள்ள மாநில தலைநகரங்களில் போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
நடந்து முடிந்த மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில் ஆள்மாறாட்டம், வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் வழங்கியது போன்ற முறைகேடுகள் நடைபெற்றதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இது தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நீட் தேர்வு முறைகேடு நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், நீட் தேர்வுக்கு எதிராகவும், முறைகேடு தொடர்பாகவும் அனைத்து மாநில தலைநகரிலும் நாளை மறுநாள் (ஜூன் 21) போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.