கேரளகுடை, ஆந்திர காபி, பாரம்பரிய பொருட்கள் விற்பனையை ஊக்குவியுங்கள்; பிரதமர் மோடி
கேரளகுடை, ஆந்திர காபி, பாரம்பரிய பொருட்கள் விற்பனையை ஊக்குவியுங்கள்; பிரதமர் மோடி
UPDATED : ஜூன் 30, 2024 01:15 PM
ADDED : ஜூன் 30, 2024 12:10 PM

புதுடில்லி: ‛‛ ஒவ்வொருவரும், தங்களது தாயார் நினைவாக ஒரு மரக்கன்றை நட வேண்டும்'' என பிரதமர் மோடி கூறினார்.
பிரசாரம்
லோக்சபா தேர்தல் காரணமாக ‛ மன் கி பாத் ' நிகழ்ச்சி நிறுத்தப்பட்டு இருந்தது. 3வது முறையாக மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு, இந்த நிகழ்ச்சி இன்று ( ஜூன் 30) மீண்டும் துவங்கியது. இன்றைய ‛மன் கி பாத்' நிகழ்ச்சி 111வது நிகழ்ச்சி ஆகும்.
அப்போது பிரதமர் மோடி பேசியதாவது: நமது வாழ்க்கையில் தாயாருக்கு பெரிய மதிப்பு உண்டு. குழந்தைகள் மீது அளவில்லாத அன்பை பொழிகிறார். அவருக்கு நம்மால் எதையும் திருப்பித் தர முடியாது. ஆனால், அதற்கு மாற்றாக ஒரு சிறப்பான விஷயத்தை செய்ய முடியும். இதன் அடிப்படையில் உலக சுற்றுச்சூழல் தினத்தில் சிறப்பு பிரசாரம் ஒன்று துவக்கப்பட்டது.
கார்தும்பி குடைகள்
அரக்கு காபி
ஆந்திராவின், சீதா ராம ராஜூ மாவட்டத்தின் அறுவடை செய்யப்படும் அரக்கு காபி அதன் நறுமணம் மற்றும் சுவைக்கு பெயர்பெற்றது. இந்த காபிக் கொட்டையை அறுவடை செய்வதில் 1.5 லட்சம் பழங்குடியின குடும்பங்கள் ஈடுபட்டு உள்ளன. இதன் மூலம் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கிறது. இந்த காபி ஜி20 மாநாட்டின் போதும் பரிமாறப்பட்டது. வாய்ப்பு கிடைக்கும் போது ஒவ்வொருவரும் இந்த காபியை சுவைத்து பாருங்கள்