ADDED : மே 24, 2025 08:35 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:“முந்தைய ஆம் ஆத்மி ஆட்சியில், பல ஆண்டுகளாக டில்லியின் வளர்ச்சிப் பணிகள் குறித்த பிரச்னைகளை, 'நிடி ஆயோக்' கூட்டத்தில் பேசவில்லை,”என, முதல்வர் ரேகா குப்தா கூறினார்.
நிடி ஆயோக் 10வது நிர்வாகக் குழுக் கூட்டம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டில்லியில் நேற்று நடந்தது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன், சமூக வலைதளத்தில் முதல்வர் ரேகா குப்தா வெளியிட்டுள்ள பதிவு:
பல ஆண்டுகளுக்குப் பின், நிடி ஆயோக் கூட்டத்தில் டில்லி அரசு பங்கேற்கிறது. இந்தக் கூட்டத்தில், விக்ஷித் டில்லி' அதாவது வளர்ச்சியடைந்த டில்லி திட்டம் குறித்து பேசுவேன்.
முந்தைய, ஆம் ஆத்மி அரசின் பொறுப்பற்ற தன்மையால், டில்லியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து, நிடி ஆயோக் கூட்டத்தில் பேசவில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.