ADDED : ஜூன் 22, 2025 12:49 AM

பீஹாரில் பிரதமர் மோடி, 2014ம் ஆண்டு முதல், 200 பொதுக்கூட்டங்களில் பங்கேற்றுள்ளார். இவை, ஒவ்வொன்றுக்கும் தலா, 100 கோடி ரூபாய் என மொத்தம் 20,000 கோடி ரூபாய் செலவாகி உள்ளது. இத்தொகையில், தேர்தல்கள் நடத்தப்பட்டு உள்ளன. மாநில அரசு ஏற்பாடு செய்த இந்த கூட்டங்களின் நோக்கம், தேர்தல் மட்டுமே.
தேஜஸ்வி யாதவ், தலைவர், ராஷ்ட்ரீய ஜனதா தளம்
சி.பி.ஐ., விசாரணை நடத்துக!
கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசு, முதலில் பொய் வாக்குறுதிகளை அளித்தது. தற்போது முடா ஊழல் போன்ற பல்வேறு திட்டங்களின் வாயிலாக கொள்ளையடித்து வருகிறது. இதில், ஏழைகளுக்கு அளிக்கும் வீடுகளிலும் காங்., - எம்.எல்.ஏ., மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுபற்றி சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
செஷாத் பூனாவாலா, தேசிய செய்தித் தொடர்பாளர்,பா.ஜ.,
மவுனம் காப்பது ஏன்?
காஸாவில் ஏற்பட்ட பேரழிவும், தற்போது ஈரான் மீதான தாக்குதல் குறித்தும் மத்திய அரசு மவுனம் காக்கிறது. இது, நம் தார்மீக பொறுப்பில் இருந்து விலகியதை காட்டுகிறது. இவ்விவகாரத்தில் நம் அரசு தெளிவுடனும், பொறுப்புடனும் செயல்பட்டு, மேற்காசியாவில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தை தணிக்க நடவடிக்கை எடுப்பது அவசியம்.
சோனியா, பார்லி., குழு தலைவர், காங்கிரஸ்

