/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரூ.1.10 கோடியில் மேம்பாட்டு பணி அமைச்சர், எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
/
ரூ.1.10 கோடியில் மேம்பாட்டு பணி அமைச்சர், எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ரூ.1.10 கோடியில் மேம்பாட்டு பணி அமைச்சர், எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ரூ.1.10 கோடியில் மேம்பாட்டு பணி அமைச்சர், எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : ஜூன் 22, 2025 12:53 AM

பாகூர் : பாகூர் தொகுதியில் ஒரு கோடியே 10 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மேம்பாட்டு பணிகளை, செந்தில்குமார் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
புதுச்சேரி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், பாகூர் தொகுதி, வண்ணாங்குளம், புது நகரில் 19 லட்சத்து 67 ஆயிரத்து 355 ரூபாய் செலவிலும், மணப்பட்டு ராயல் நகரில் 15 ஆயிரத்து 41 ஆயிரத்து 113, மூர்த்திக்குப்பம் ஸ்ரீராம் நகரில் 23 லட்சத்து 70 ஆயிரத்து 628, பாகூர் பேட் சாந்தி நகரில் 20 லட்சத்து 14 ஆயிரத்து 731 ரூபாய் செலவிலும் தார் சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான பூமி பூஜை விழா நடந்தது. அமைச்சர் சாய் சரவணன் குமார், செந்தில்குமார் எம்.எல்.ஏ., ஆகியோர் பூமி பூஜை செய்து, பணிகளை துவக்கி வைத்தனர். தொடர்ந்து, பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில், எம்.எல், ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில், குருவிநத்தம் கிழக்கு மற்றும் வடக்கு மாட வீதியில், 18 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் செலவில் சிமென்ட் சாலை, சண்டிகேஸ்வரி அம்மன் கோவில் சந்திப்பில் இருந்து அரசு பள்ளி வரை 13 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் செலவில் வடிகால் வசதியுடன் சிமென்ட் சாலை அமைக்கும் பணியை, செந்தில்குமார் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சிகளில், நலத்துறை இயக்குனர் இளங்கோவன், பாட்கோ மேலாண் இயக்குனர் சிவக்குமார், செயற்பொறியாளர் பக்தவச்சலம், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சதாசிவம், உதவி பொறியாளர் சுப்ரமணியன், இளநிலை பொறியாளர் புனிதவதி உட்பட பலர் பங்கேற்றனர்.