சாம்ராஜ் நகர் லோக்சபா தொகுதி காங்., மகளிர் தலைவி எதிர்பார்ப்பு
சாம்ராஜ் நகர் லோக்சபா தொகுதி காங்., மகளிர் தலைவி எதிர்பார்ப்பு
ADDED : ஜன 10, 2024 12:40 AM

சாம்ராஜ் நகர் : ''சாம்ராஜ் நகர் லோக்சபா தேர்தலில் எனக்கு சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது,'' என, கர்நாடக மாநில காங்கிரஸ் மகளிர் அணி தலைவி புஷ்பா தெரிவித்தார்.
சாம்ராஜ் நகரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
லோக்சபா தேர்தலில் சாம்ராஜ் நகர் தொகுதியில் போட்டியிட எனக்கு சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. வெற்றி பெறும் தகுதி உள்ள பெண்களுக்கு சீட் வழங்க வேண்டும் என மேலிடத்திடம் கோரிக்கை வைத்துள்ளேன்.
அமைப்புக்காக மாநிலம் முழுதும் பயணம் செய்து உள்ளேன். கட்சி பிரச்னையில் இருந்தபோதும், நேர்மையாக உழைத்தேன். 2018 சட்டசபை தேர்தலில், கொள்ளேகால் தொகுதியில் சீட்டுக்கு ஆசைப்பட்டேன்; அது நடக்கவில்லை.
அயோத்தியில் கட்டப்பட்டு உள்ள ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்முக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
புதிய பார்லிமென்ட் கட்டட திறப்பு விழாவுக்கு கூட, பழங்குடி சமூகத்தை சேர்ந்த நாட்டின் முதல் குடிமகள் அழைக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டார். கோவில் திறப்புவிழாவுக்கு அவரை அழைக்க வேண்டும்.
முதல்வர் சித்தராமையாவுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. ஆனால், சித்தராமையாவிடம் ராமரை பார்க்கிறோம். நாங்களும் ஸ்ரீராமரை வணங்குகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

