கால்வாய்களில் வண்டல் மண் அகற்றம் தூய்மைப்பணி தொடரும் என முதல்வர் அறிவிப்பு
கால்வாய்களில் வண்டல் மண் அகற்றம் தூய்மைப்பணி தொடரும் என முதல்வர் அறிவிப்பு
ADDED : மே 24, 2025 08:36 PM
புதுடில்லி:“மாநகராட்சியின் 12 மண்டலங்களிலும் மெகா துாய்மை இயக்கத்தின் கீழ், 3,500 கி.மீ., சாலைகள் சுத்தம் செய்யப்பட்டுள்ளன,” என, முதல்வர் ரேகா குப்தா கூறினார்.
முதல்வர் ரேகா குப்தா, நிருபர்களிடம் கூறியதாவது:
மெகா துாய்மை இயக்கத்தின் கீழ், டில்லி மாநகராட்சியின் 12 மண்டலங்களிலும் 3,500 கி.மீ., சலைகள் சுத்தம் செய்யப்பட்டுள்ளன.
மேலும், 11,000 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கழிவு நீர் கால்வாய்களில் இருந்து, 19,892 மெட்ரிக் டன் வண்டல் மண் அகற்றப்பட்டுள்ளது.
இந்த இயக்கம் தொடர்ந்து நடக்கும். மாநகரின் ஒவ்வொரு தெருவையும் சுத்தமாக பராமரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ரோஹினி மண்டலத்தில் அதிகபட்ச குப்பை அகற்றப்பட்டுள்ளன. நஜப்கர், கரோல் பாக் பகுதிகள் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டுள்ளன.
நீர்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறை சார்பில், 27 வடிகால்களில் இருந்து 13,72,276 மெட்ரிக் டன் வண்டல் மண் அகற்றப்பட்டுள்ளது. வரும் 31ம் தேதிக்குள் மீதமுள்ள கால்வாய்களிலும் வண்டல் மண் அகற்றப்படும்.
அதேபோல, 4,140 தெருவிளக்குகள் சீரமைக்கப்பட்டு, 285 புதிய விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
பொது சுவர்கள், கம்பங்கள் மற்றும் விளம்பர பலகைகளில் இருந்து 37,628 சட்டவிரோத சுவரொட்டிகள் மற்றும் 8,399 பதாகைகள் அகற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.