/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நரம்பியல் பிரச்னைக்கு நவீன சிகிச்சை முறைகள் அப்போலோ டாக்டர் ஸ்ரீசாந்த் ஸ்ரீநிவாசன் தகவல்

ADDED : ஜூன் 09, 2024 02:32 AM

புதுச்சேரி, : நரம்பு சார்ந்த பிரச்னைகளுக்கு புதிய நவீன சிகிச்சை முறைகள் வந்துள்ளதாக அப்போலோ மருத்துவமனை நரம்பியல் டாக்டர் ஸ்ரீசாந்த் ஸ்ரீநிவாசன் தெரிவித்தார்.
புதுச்சேரி நுாறடிச்சாலை என்.டி. மகால் எதிரில் உள்ள அப்போலோ மருத்துவமனை தகவல் மையத்திற்கு வந்த அவர், கூறியதாவது:
மத்திய நரம்பு மண்டலமான மூளை, முதுகுதண்டுவடம் மற்றும் புற நரம்பு மண்டலம் சார்ந்த பிரச்னைகள் தற்போது பரவலாக உள்ளது.
சமீபத்தில் நரம்பியல் நோய்களை அறியும் முறை, சிகிச்சை முறைகளில் பல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. உலக அளவில் 5 பேரில் ஒருவருக்கு மைக்ரேன் மற்றும் தலைவலி பிரச்னை உள்ளது.
பக்கவாதம் அறிகுறி தென்பட்ட 3 முதல் நான்கரை மணிக்குள், உறைந்த ரத்த கட்டிகளை தகர்க்க கூடிய மருந்துகள் புதிதாக வந்துள்ளது.
மருந்துகளால் செய்ய முடியாது என்றால், கதீட்டர் பயன்படுத்தி மெக்கானிக்கல் த்ராம்பெக்டமி செய்யலாம். பக்கவாத்திற்கு பிறகு ஏற்படக் கூடிய ஸ்பாஸ்ட்சிட்டியை போடாக்ஸ் ஊசி மூலம் ஓரளவுக்கு குணப்படுத்தலாம்' என்றார்.
டாக்டர் பிரியங்கா ராணா பத்கிரி கூறுகையில், '60 வயதிற்கு மேற்பட்டோர்களின் உடல் நல பாதுகாப்பில் கவனம் செலுத்துதல் முதியோர் மருத்துவம். முதியோர்களுக்கு ஏற்படும் உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள், பக்கவாதம், நீரிழிவு உள்ளிட்ட நோய்களுக்கு வழக்கமான டாக்டர்கள் சிறந்த கவனிப்பு வழங்கினாலும், முதியோர் தேவைகளை நிர்வகிப்பதில் முதியோர் மருத்துவ டாக்டர்கள் சிறப்பு கவனம் செலுத்துவர்' என்றார்.