/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முதியவர் அடித்து கொலை மனநிலை பாதித்தவருக்கு வலை
/
முதியவர் அடித்து கொலை மனநிலை பாதித்தவருக்கு வலை
ADDED : ஜூன் 09, 2024 02:36 AM
வடலுார், : முதியவரை அடித்து கொலை செய்த மனநிலை பாதித்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கடலுார் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அடுத்த பூதம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் செல்வராசு, 67; விவசாயி. இவர் நேற்று மாலை 3:30 மணிக்கு தனது நிலத்தில் இருந்து வீட்டிற்கு மொபட்டில் புறப்பட்டார். பரவனாறு பாலத்தில் வந்தபோது அங்கு நின்றிருந்த மனநிலை பாதித்த அதே ஊரை சேர்ந்த கல்யாணசுந்தரம் மகன் ஜெயசூர்யா,27; தான் கையில் வைத்திருந்த கட்டையால் செல்வராசு தலையில் தாக்கினார்.
அதில் படுகாயமடைந்து விழுந்த செல்வராசுவை, அங்கிருந்தவர்கள் மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.
இதுகுறித்து செல்வராசு மனைவி ஜெயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில், குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிந்து, ஜெயசூர்யாவை தேடி வருகின்றனர்.