sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

முதல்வர், அமைச்சர்களுக்கு எதிராக பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி புதுச்சேரி அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு

/

முதல்வர், அமைச்சர்களுக்கு எதிராக பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி புதுச்சேரி அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு

முதல்வர், அமைச்சர்களுக்கு எதிராக பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி புதுச்சேரி அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு

முதல்வர், அமைச்சர்களுக்கு எதிராக பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி புதுச்சேரி அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு


ADDED : ஜூன் 30, 2024 04:40 AM

Google News

ADDED : ஜூன் 30, 2024 04:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதல்வர் ரங்கசாமி மற்றும் பா.ஜ., அமைச்சர்களுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ள பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள், கவர்னர் ராதாகிருஷ்ணனை சந்தித்து பேசியதால் புதுச்சேரி அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரியில் என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடந்து வரும் நிலையில், நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ., சார்பில் போட்டியிட்ட அமைச்சர் நமச்சிவாயம் படு தோல்வியடைந்தார். இதையடுத்து, பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள், முதல்வர் ரங்கசாமிக்கு எதிராகவும், பா.ஜ., அமைச்சர்களுக்கு எதிராகவும் அணி திரண்டுள்ளனர்.

கடந்த இரு வாரங்களுக்கு முன், பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் கல்யாணசுந்தரம் தலைமையில் ஜான்குமார், வெங்கடேசன், அசோக்பாபு, பா.ஜ., ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் அங்காளன், சிவசங்கரன் ஆகியோர் தனியார் ஓட்டலில் ரகசிய கூட்டம் நடத்தி அமைச்சர் பதவியை சுழற்சி முறையில் வழங்க வேண்டும் என, வலியுறுத்தினர்.

இதன் தொடர்ச்சியாக, நேற்று காலை 9:00 மணிக்கு, சட்டசபை வளாகத்தில் உள்ள ஜான்குமார் எம்.எல்.ஏ., அலுவலகத்தில் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் ஒன்று கூடி ஆலோசனை நடத்தினர். பின், எம்.எல்.ஏ.,க்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், அசோக்பாபு, அங்காளன், சிவசங்கரன், வெங்கடேசன், ரிச்சர்டு ஆகியோர் கவர்னர் ராதாகிருஷ்ணனை கவர்னர் மாளிகையில் சந்தித்து பேசினர். காலை 9:30 மணிக்கு துவங்கிய இந்த சந்திப்பு 11.30 மணி வரை நீடித்தது.

அப்போது, 'என்.ஆர்.காங்., கூட்டணி அரசில் அங்கம் வகித்தும் எங்கள் தொகுதியில் எதுவுமே செய்ய முடியவில்லை. எங்களை கலந்து ஆலோசிக்காமல் பள்ளி, கல்லுாரிகள் இருக்கும் பகுதிகளில் ரெஸ்ட்டோ பார் நடத்த அனுமதிக்கப்படுகிறது. இதனால் மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர். இதுதான், லோக்சபா தேர்தலில் பா.ஜ., தோல்வியடைய காரணம் என, கவர்னரிடம், பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் எடுத்துக் கூறினர்.

மேலும், 'விரைவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. உங்களுடைய தொகுதிக்கு எந்தந்த திட்டங்கள் வேண்டும் என்று முதல்வர் கேட்கவில்லை. ஆனால், எதிர்கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கு எதை கேட்டாலும் செய்து தருகிறார். முதல்வரின் அணுகுமுறையால் தான் எங்கள் தொகுதியில் எங்களால் ஓட்டு வாங்கி தர முடியவில்லை.

கூட்டணி தர்மத்தை முதல்வர் மதித்து நடந்ததே இல்லை. எதிர்கட்சி எம்.எல்.ஏ.,க்களை முதல்வர் அரவணைக்கிறார். பா.ஜ., வெளியே போனாலும், தி.மு.க.,வை வைத்து ஆட்சி அமைத்து விடலாம் என்றே செயல்படுகிறார்.

அப்புறம் எதற்கு கூட்டணியில் பா.ஜ., இருக்க வேண்டும். ஆதரவு தேவையென்றால் வெளியில் இருந்து கொடுத்து விடலாம். என்.ஆர். காங்., கட்சிக்கு பா.ஜ., தேவையில்லையென்றால் தி.மு.க., வைத்துக்கொண்டு கூட ஆட்சி நடத்தட்டும்.

எங்களுக்கும் கவலையில்லை. மக்களுக்கு செய்ய முடியாமல் வெறும் எம்.எல்.ஏ.,வாக இருந்து என்ன பயன்' என, கொந்தளித்தனர்.

'லோக்சபா தேர்தலில் தோல்வியை சந்தித்துள்ளோம். பா.ஜ., எம்.எல்.ஏ.,க்களை முதல்வர் மதிப்பது இல்லை. அனைத்தையும் தன்னிச்சையாகவே செய்கிறார். ஆட்சியும், நிர்வாகமும் சரியில்லை. குப்பை வாருவது உட்பட பல்வேறு பணிகளில் ஊழல் நடப்பதாக பகிரங்கமாகவே குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது. ஊழல் ஆங்காங்கே புரையோடி உள்ளது. எந்த விஷயமும் காசு இல்லாமல் நடப்பதில்லை.

புரோக்கர்களை வைத்து காசு வாங்குகின்றனர். இதனால் மக்கள் மத்தியில் கெட்ட பெயர் உள்ளது. பா.ஜ., அமைச்சர்களும் எங்களுக்கு சாதகமாக இருந்து, உரிமைகளை பெற்று தரவில்லை. தங்களிடம் உள்ள வாரியங்களைகூட விட்டு தரவில்லை.

ஆட்சியில் அமர்ந்திருந்தும் லோக்சபா தேர்தலில் தோற்கிறோம் என்றால் நம்முடைய நிர்வாகம் சரியில்லை என்று தான் அர்த்தம். பா.ஜ., அமைச்சர்கள் பதவிகளை சுழற்றி முறையில் மாற்ற வேண்டும். அப்போது மக்களுக்கு பா.ஜ., மீது நம்பிக்கை வரும் எனவும் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் குமுறியுள்ளனர்.

அனைத்தையும் கேட்டுக்கொண்ட கவர்னர் ராதாகிருஷ்ணன் இதுதொடர்பாக மேலிடத்தின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக உறுதியளித்தார். அடுத்ததாக, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, அமைப்பு செயலாளர் சந்தோஷ்ஜியை சந்தித்து பேச நேரம் கேட்டு ஒட்டுமொத்தமாக பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

ஜூலை 2ம் தேதி டில்லிக்கு சென்று தேசிய தலைவர்களை சந்தித்து முறையிட முடிவு செய்துள்ளனர். பா.ஜ., எம்.எல்.ஏ.,க்களின் போர்க்கொடியால் புதுச்சேரி அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முதல்வர் ரங்கசாமி, பா.ஜ., அமைச்சர்களுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ள பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள், ஏற்கனவே கடந்தாண்டு அக்., 23ம் தேதியன்று பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து, கட்சி மேடலித்திற்கு கடிதம் எழுதி இருந்தனர். இப்படியே போனால் லோக்சபா தேர்தலில் தோல்வியை தழுவுவோம் என, எச்சரித்து இருந்தனர். தற்போது, 2026ல் நடக்க உள்ள சட்டசபை தேர்தலை மனதில் வைத்து மீண்டும் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

லிஸ்ட் கொடுங்க: கவர்னர் உறுதி

இது, 2வது முறை



வீடுகள், பள்ளிகள், கோவில்களுக்கு மத்தியில் ரெஸ்ட்டோ பார்கள் திறக்கப்பட்டுள்ளது குறித்து பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் கவர்னர் ராதாகிருஷ்ணனிடம் முறையிட்டபோது, 'அனைத்தையும் லிஸ்ட் போட்டு கொடுங்க... கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கிறேன்' என கவர்னர் உறுதி அளித்துள்ளார்.

இது, 2வது முறை








      Dinamalar
      Follow us