/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முதல்வர் ரங்கசாமி ராஜினாமா செய்ய வேண்டும் மாஜி முதல்வர் நாராயணசாமி ஆவேசம்
/
முதல்வர் ரங்கசாமி ராஜினாமா செய்ய வேண்டும் மாஜி முதல்வர் நாராயணசாமி ஆவேசம்
முதல்வர் ரங்கசாமி ராஜினாமா செய்ய வேண்டும் மாஜி முதல்வர் நாராயணசாமி ஆவேசம்
முதல்வர் ரங்கசாமி ராஜினாமா செய்ய வேண்டும் மாஜி முதல்வர் நாராயணசாமி ஆவேசம்
ADDED : ஜூன் 09, 2024 03:44 AM
புதுச்சேரி : ஆட்சியாளர்கள் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டதால் முதல்வர் ரங்கசாமி ராஜினாமா செய்ய வேண்டும் என, முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
எதிர்கட்சிகளை மதிக்காத தன்மை, ஆணவப்போக்கு தொழிலதிபர்களை மிரட்டுவது, சி.பி.ஐ.,அமலாக்கத் துறை ஆகியவற்றை பயன்படுத்துவது, குடியுரிமை சட்டம், நீட் உள்ளிட்ட மக்கள் விரும்பாத சட்டங்களை நிறைவேற்றியத்தற்கு பா.ஜ.,விற்கு இந்திய மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர். 400 தொகுதிகளை பெறுவோம் என மார்தட்டிய பா.ஜ., 240 தொகுதி களில் மட்டும் தான் வெற்றிப் பெற்றுள்ளது.
மாநில கட்சிகளை சமரசம் செய்து மீண்டும் பிரதமராக மோடி பதவி ஏற்க உள்ளார். சிறந்த அரசியல்வாதி என்றால் பிரதமராக மோடி பதவி ஏற்க கூடாது.
நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு ஆகியோர் நீண்ட அனுபவம் உள்ள அரசியல் தலைவர்கள். அவர்கள் மோடியின் சர்வாதிகாரத்தை ஏற்க மாட்டார்கள். கூட்டணி கட்சிகளால் பா.ஜ.,ஆட்சி கவிழும்.
புதுச்சேரி மக்கள் லோக்சபா தேர்தலில் அமோக வெற்றியை தந்துள்ளனர்.
பணபலம், அதிகார மீறல் ஆகியவற்றை தாண்டி புதுச்சேரி மக்கள் தீர்ப்பினை வழங்கியுள்ளனர்.
முதல்வர், அமைச்சர்கள் என, 22 எம்.எல்.ஏ.,கள் இருந்தும் 28 தொகுதிகளில் காங்., வேட்பாளர் வைத்திலிங்கம் கூடுதல் ஓட்டுகள் பெற்று வெற்றிப் பெற்றுள்ளார்.
அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன் தாங்களுடைய தொகுதிகளில் குறைவான ஓட்டுகளை பெற்றுள்ளனர்.
என்.ஆர் காங்., - பா.ஜ.,ஆட்சியில் ஊழல் மலிந்துள்ளது. முதல்வர், அமைச்சர்கள் செயல்பாடுகள் மக்கள் மத்தியில் வெறுப்பினை ஏற்படுத்தியுள்ளது.
ஆட்சியாளர்கள் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டதால், முதல்வர் ரங்கசாமி ராஜினாமா செய்ய வேண்டும்.
புதுச்சேரிரியில் இண்டியா கூட்டணி கட்சிகளின் கை ஓங்கியுள்ளது. இனி இந்தியா கூட்டணி கட்சிகளின் காலமாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.