/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
4 பேரிடம் ரூ.17.87 லட்சம் 'அபேஸ்' சைபர் கிரைம் போலீஸ் விசாரணை
/
4 பேரிடம் ரூ.17.87 லட்சம் 'அபேஸ்' சைபர் கிரைம் போலீஸ் விசாரணை
4 பேரிடம் ரூ.17.87 லட்சம் 'அபேஸ்' சைபர் கிரைம் போலீஸ் விசாரணை
4 பேரிடம் ரூ.17.87 லட்சம் 'அபேஸ்' சைபர் கிரைம் போலீஸ் விசாரணை
ADDED : ஜூன் 09, 2024 03:45 AM
புதுச்சேரி, : புதுச்சேரியில் நான்கு பேரிடம் 17.87 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி பட்டேல் சாலையில் பிரபல தனியார் ஓட்டல் உள்ளது. மர்ம நபர் ஒருவர் ஓட்டலில் வங்கி கணக்கின் பெயரை மாற்றி, 14.81 லட்சம் ரூபாய் எடுத்துள்ளார்.
இதுபற்றி, ஓட்டல் தரப்பில் இருந்து என்.சி.ஆர்.பி., இணைய தளத்தில் புகார் அளிக்கப்பட்டது.
மேலும், புதுச்சேரியை சேர்ந்த பாலாஜி என்பவரை மர்ம நபர் ஒருவர் மொபைல் போனில் தொடர்பு கொண்டு, வீட்டில் இருந்தபடியே அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறினார். அதை நம்பி அவர் 1.42 லட்சம் ரூபாய் அனுப்பி ஏமாந்தார்.
சின்னக்கடை பகுதியை சேர்ந்த பிர்தளஸ் என்பவரை தொடர்பு கொண்ட நபர், ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறினார். அதை நபம்பி அவர், 1.45 லட்சம் ரூபாய் அனுப்பி, ஏமாந்தார்.
பூமியான்பேட்டை பகுதியை சேர்ந்த ராகுல் என்பவருக்கு அமேசான் நிறுவனத்தின் மூலம் சலுகை கிடைத்துள்ளதாக மெயில் வந்தது.
அதை நம்பி அவர் 19 ஆயிரம் ரூபாய் அனுப்பி ஏமாந்தார்.
இதுகுறித்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.