/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாணவர்களுக்கு உதவித்தொகை முதல்வர் ரங்கசாமி வழங்கல்
/
மாணவர்களுக்கு உதவித்தொகை முதல்வர் ரங்கசாமி வழங்கல்
மாணவர்களுக்கு உதவித்தொகை முதல்வர் ரங்கசாமி வழங்கல்
மாணவர்களுக்கு உதவித்தொகை முதல்வர் ரங்கசாமி வழங்கல்
ADDED : ஜூன் 28, 2024 06:22 AM

புதுச்சேரி: பாண்டிச்சேரி ரவுண்ட் டேபிள் 70 சார்பில், தேர்தெடுக்கப்பட்ட 70 மாணவர்களுக்கு வருடாந்திர கல்வி உதவித்தொகையினை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.
பாண்டிச்சேரி ரவுண்ட் டேபிள் 70 சார்பில், பல்வேறு சமூக பணிகள் மற்றும் சேவைகள் செய்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக பெற்றோர்கள் இழந்த பிள்ளைகள், தந்தை அல்லது தாய் யாராவது ஒருவரை இழந்த பிள்ளைகள், மிகவும் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் பிள்ளைகள் என 70 மாணவர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு வருடாந்திர தேவையான கல்வி உபகரனங்கள் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் பாண்டிச்சேரி ரவுண்ட் டேபிள் 70 விருக் ஷம் திட்டத்தின் மூலம் செலுத்தப்படும்.
இதற்கான முதல் தவணை 10 ஆயிரம் ரூபாய் வழங்கும் நிகழ்ச்சி முதலியார்பேட்டை சுகன்யா கன்வென்ஷன் சென்டரில் நடந்தது.
பாண்டிச்சேரி ரவுண்ட் டேபிள் 70 தலைவர் சரவணன் தலைமை தாங்கினார்.
செயலாளர் அசோக், பொருளாளர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தனர்.
முதல்வர் ரங்கசாமி, 70 மாணவர்களுக்கு முதல் தவணை தொகையாக 10 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை வழங்கினார்.
விழாவில் அமைச்சர் லட்சுமிநாராயணன், சம்பத் எம்.எல்.ஏ., சென்பா கார் ேஷாரும் நிறுவனர் அசோகன், பாண்டிச்சேரி ரவுண்ட் டேபிள் 70 ஏரியா சேர்மன் சுஜய் சுதர்ஷன், ராமன் டிரேடர்ஸ் நிறுவனர் விமல் சேட்டன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.