ADDED : ஜூன் 28, 2024 06:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி அரசு பள்ளிகள் மதிய உணவு சமைப்போர் சங்கம் சார்பில் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் நடந்தது.
புதுச்சேரி கல்வித்துறை வளாகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தலைவர் விநாயக முருகன் தலைமை தாங்கினார். செயலாளர் சிவசங்கர் முன்னிலை வகித்தார்.
கவுரவத் தலைவர் ஆனந்த தாசன், சம்மேளன கூட்டு இயக்கம் தலைவர் செல்வம், செயலாளர் முருகவேல், செயலாளர்கள் சுமித்ரா, ராஜா ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், 20 ஆண்டுகளுக்கு மேலாக வேலை செய்யும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும் உட்பட பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.